ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களில் 1-ஆம் பாவம் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். இனி ரிஷப லக்னத்தாரின் மற்ற பாவங்கள் பற்றி காண்போம்.

Advertisment

2-ஆம் பாவம் (ரிஷப லக்னம்) 2-ஆம் வீட்டைக்கொண்டு தனம், வாக்கு வண்மை, குடும்பம், வலது கண் போன்றவற்றினைப் பற்றி அறியலாம்.

ரிஷப லக்னத்திற்கு புதன் 2-ஆம் அதிபதி யாகும். புதன் சுபகிரகச் சேர்க்கை பெற்றால் சுபராகவும், பாவகிரகச் சேர்க்கை பெற்றால் பாவியாகவும் செயல்படும். புதன் சுபகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற்றாலும், ஆட்சி, உச்சம் பெற் றாலும் நல்ல அறிவாற்றல், சிறப்பான வாக்கு வண்மை, சொன்ன சொல்லைக் காப் பாற்றும் திறன், வாக்கால்,பேச்சால் சம்பா திக்கும் ஆற்றல் உண்டாகும். 2-ல் சுக்கிரன், குரு இருந்தாலும், புதன் சேர்க்கை பெற்றிருந் தாலும் சிறப்பான பேச்சாற்றல், அதனால் சமுதாயத்தில் நல்ல உயர்வு, பலருக்கு ஆலோ சனைகள் வழங்கும் ஆற்றல் உண்டாகும். 2-ல் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் கடுஞ்சொற்கள் பேசக்கூடிய நிலை- அதனால் மற்றவர்களிடம் விரோதம் உண்டாகும்.

லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி புதன் சுபகிரகச் சேர்க்கை பெற்றாலும், 2-ல் சுபர் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால் குடும்பத்தில் ஒற்றுமை யற்ற நிலை உண்டாகும்.

Advertisment

2-ஆம் அதிபதி புதன் ரிஷப லக்னத்திற்கு யோகத்தை அளிக்கக்கூடிய கிரகங்களாகிய சூரியன், சுக்கிரன், சனி சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற்று தனகாரகன் குருவும் பலம் பெற்றிருந்தால் புகழ், பெருமை உண்டாவது மட்டுமின்றி சிறந்த செல்வந்தராகும் வல்லமையும் உண்டாகும். சூரியன் தந்தைகாரகன் என்பதால், தன ஸ்தானாதிபதி புதனுடன் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் தந்தை சேர்த்து வைத்த சொத்துகளை அனுபவிக்கும் யோகம், பொருளாதார மேன்மைகள் உண்டாகும்.

sivan

புதன், குரு பலவீனமாக இருந்தாலும், வக்ரம் பெற்றாலும், 3, 6, 8, 12-ல் மறைந் திருந்தாலும் மறைவு ஸ்தானாதிபதிகளின் சேர்க்கை மற்றும் சாரம் பெற்றிருந்தாலும் பணவரவுகளில் நெருக்கடி, கொடுக்கல்- வாங்கலிலில் வீண் பிரச்சினை ஏற்படும்.

Advertisment

ரிஷப லக்னத்திற்கு 2-ஆம் வீடு வலது கண்ணைப் பற்றிக் குறிப்பிடுவதாக உள்ளது. கண்களுக்குக் காரகனான சூரியன், சுக்கிரன், சந்திரன் பலம் பெற்று 2-ஆம் அதிபதி புதனும் பலம் பெற்றிருந்தால் கண் பார்வையானது சிறப்பாக இருக்கும்.

2-ல் சூரியன் அல்லது சுக்கிரன் அமையப் பெற்று சனி, செவ்வாய், ராகு போன்ற பாவ கிரகங்கள் உடனிருந்தாலும், 8-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் அமையப்பெற்று 2-ஆம் வீட்டைப் பார்வை செய்தாலும், புதன் நீசம் பெற்றிருந் தாலும் இக்கிரகங்களின் தசை புக்தி வருகின்ற காலங்களில் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

3-ஆம் பாவம்

(ரிஷப லக்னம்)

லக்னத்திற்கு 3-ஆம் வீட்டைக் கொண்டு இளைய உடன்பிறப்பு, சுய முயற்சி, வீரம், விவேகம், வீரியம் பற்றி அறியலாம்.

ரிஷப லக்னத்திற்கு 3-ஆம் அதிபதி சந்திரன் என்பதால், பெண் உடன்பிறப்புகள் உண்டா வதற்கான வாய்ப்புகள் அதிகம். சந்திரனும் லக்னாதிபதி சுக்கிரனும் பெண் கிரகங்கள் என்பதால் பெரும்பாலும் இக்கிரகங்கள் சேர்க் கைப் பெற்று பலமாக இருந்தால் சகோதரி யோகமும் அதன்மூலம் சிறப்பும் ஏற்படும்.

சகோதரகாரகன் செவ்வாய் பலம் பெற்று, 3-ல் ஆண் கிரகங்களான குரு, சூரியன் அமையப் பெற்றாலும் அல்லது சந்திரன் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் இளைய ஆண் உடன்பிறப்பு அமையும்.

சந்திரனுடன் சனி, ராகு, கேது சேர்க்கை பெற்று சந்திரன் வலுவிழந்து காணப் பட்டால் சகோதரர் இல்லாத நிலை- அப்படியே இருந்தாலும் அவர்களிடையே ஒற்றுமைக்குறைவு, அனுகூலமற்ற நிலை உண்டாகும். சனி, ராகு, கேது போன்ற கிரகங் களின் சேர்க்கை 3-ல் இருப்பதும் சந்திரன் சேர்க்கை பெற்றிருப்பதும் சகோதரர்வழியில் சிறப்பில்லை.

கலை, இசைத்துறைகளில் உண்டாகக் கூடிய ஈடுபாட்டைப் பற்றி 3-ஆம் பாவத்தைக் கொண்டு அறியலாம். ரிஷப லக்னத்திற்கு கலைக்காரகன் சுக்கிரனே லக்னாதிபதியாக இருப்பது சிறப்பு என்பதால், சுக்கிரன் 3-ஆம் அதிபதி சந்திரனின் சேர்க்கைப் பெற்றோ, பரிவர்த்தனைப் பெற்றோ இருந்தால் கலை, இசை சம்பந்தப்பட்ட துறைகளில் சாதனைகள் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

3-ஆம் வீட்டில் குரு அமையப்பெற்றாலும், சனி, ராகு போன்ற கிரகங்கள் அமைந்து சுப கிரகப் பார்வை பெற்றாலும் சுயமுயற்சியால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

ரிஷப லக்னத்தின் மற்ற பாவங்கள்

அடுத்த இதழில்...

செல்: 72001 63001